சொற்களைத் தவிர வேறு துணையில்லை
✍ Scribed by லஷ்மி சரவணகுமார் / Lakshmi Saravanakumar
- Book ID
- 100285579
- Year
- 2020
- Tongue
- Tamil
- Weight
- 1 MB
- Edition
- 1
- Category
- Fiction
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
முன்னுரை
லஷ்மி சரவணகுமார் என்று பெயர் வைத்துக் கொள்வதற்கு முன்பிருந்தே கட்டுரைகள் எழுதியவன் என்ற போதிலும் இதுநாள் வரையிலான கட்டுரைகளை தொகுக்க வேண்டுமெனத் தோன்றியதில்லை. கதைகள் மீதிருந்த விருப்பத்தில் கட்டுரைகள் எழுதுவதை ஒரு கட்டத்தில் தவிர்த்தேன். 2008க்கு முன்பாக எழுதிய கட்டுரைகளில் ஒன்றுகூட இப்பொழுது கைவசமில்லை. வெளிவந்த இதழ்கள் தொலைந்துபோனதோடு கையெழுத்துப் பிரதிகளும் இல்லாததால் அதை வாசிக்கும் துர்பாக்கியம் வாசகர்களுக்கு நேரவில்லை. இந்தத் தொகுப்பிலிருக்கும் கட்டுரைகளுமே கூட கைவசமிருந்ததில் பாதி தான். சொல்லப்போனால் இதுவரையிலுமான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. சினிமா, இலக்கியம் என வெவ்வேறு வகைமைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய இக்கட்டுரைகளை வாசிக்கையில் அவ்வப்போது தொகுப்பாக்கி இருக்கலாமோ என இப்பொழுது தோன்றுகிறது.
புனைவுகளில் தொடர்ந்து இயங்கி வந்ததால் அபுனைவுகள் எழுதுவதற்கு ஒரு தயக்கமும் சோம்பேறித்தனமும் இருக்கும். ஆனால் அபுனைவுகள் எழுதும் போதுதான் நிறைய வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடியும். அறிவின் விசாலமான கதவுகளைத் திறந்து விடுவது அபுனைவுகள் தான். அந்த வகையில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர், வ.கீதா, ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கம், சாரு நிவேதிதா, சி.மோகன் இவர்கள் ஒவ்வொருவரின் நூல்கள் வழியாகவும் நான் கற்றுக் கொண்டது அனேகம். இந்தக் கட்டுரைகள் எழுத ஏதோவொரு வகையில் அவர்களின் எழுத்துதான் தூண்டுதலும். தமிழ் சிறுபத்திரிக்கை மரபிலிருந்துதான் வலுவான கோட்பாட்டாளர்கள் இங்கு உருவானார்கள், எண்பதுகளுக்குப் பிறகு புனைவுகளிலும் கவிதைகளிலும் நிகழ்ந்த அரசியல் ரீதியான மாற்றம் என்பது கோட்பாட்டாளர்களால் மட்டுமே சாத்தியமானது. வெவ்வேறு தத்துவங்களை, புதிய கண்ணோட்டங்களை எழுத்து முறைகளை தமிழுக்குக் கொண்டு வந்த அவர்கள் யாருக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு.
கவிஞர்களையும் புனைவு எழுத்தாளர்களையும் கொண்டாடிய அளவிற்கு நாம் ஆய்வாளர்களையும் கோட்பாட்டாளர்களையும் கொண்டாடவில்லை. இன்று அப்படியானவர்களின் பங்களிப்பு குறைந்துபோய் சிற்றிதழ் மரபும் இல்லாமல் முழுக்க இணையத்தோடு பிணைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை உருவாகிவிட்டிருக்கிறது. எந்தவொன்றையும் இணையத்தில் தேடி வாசித்துவிடலாம், ஆனால் ஒரு பிரச்சனையின் வெவ்வேறு கண்ணோட்டங்களை நம் சூழலில் அதற்கான அரசியல் பிண்ணனிகளை நம்மால் தேடிக் கண்டடைய முடியாது. அதற்குத்தான் இவர்களை வாசிக்க வேண்டியது முக்கியமாகிறது. ரசனைக்கும் ரசனையின் அரசியலுக்குமான தூரம் எப்போதும் அதிகம். அந்த வகையில் வெறுமனே ரசனையாக அல்லாமல் இந்தக் கட்டுரைகளில் சில பொதுவான போக்கிலிருந்து விலகி சினிமாவிலிருக்கும் சாதியை, ரசிகர் மன்ற அரசியலை பேசு பொருளாக்கி இருப்பதைக் குறிப்பாக உணர்த்துகிறேன். குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்முறைகள் குறித்து நிறைய எழுதியிருந்தாலும் இதில் ஒன்றைத் தவிர மற்றவற்றை சேர்க்கமுடியவில்லை. அடுத்த தொகுப்பில் அவற்றை சேர்க்க வேண்டும். அல்லது அந்தக் கட்டுரைகளை தனியாகத் தொகுக்க வேண்டும்.
📜 SIMILAR VOLUMES
இஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் எடுத்துரைக்கிறது. அவற்றோடே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால
சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்